இந்தக் கையேட்டில் ஏராளமான தகவல்கள் மனிதன் தன்னை உணர்ந்து மனிதனாக வாழத்தூண்டுபவையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் புனையப்பட்டவை. எங்களுடைய அறியாமை, அனுபவக் குறைச்சல், சிறுபிள்ளைத்தனம், என்பவற்றால் எண்ணில்லாத் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே,...
Leggi di più
இந்தக் கையேட்டில் ஏராளமான தகவல்கள் மனிதன் தன்னை உணர்ந்து மனிதனாக வாழத்தூண்டுபவையாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் புனையப்பட்டவை. எங்களுடைய அறியாமை, அனுபவக் குறைச்சல், சிறுபிள்ளைத்தனம், என்பவற்றால் எண்ணில்லாத் தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே,
“பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார்
இழைத்துணர்ந்து தீண்டிய கேள்வியவர்.”
( பொருட்பால் அதிகாரம்:42, குறள்:417)
என்பதற்கிணங்க கருத்துக்களை நுட்பமாக ஆராய்ந்து பார்க்கும் பூரணத்துவமானவர்கள் நீங்கள் என்பதால், தவறுகளைச்சுட்டிக்காட்டல் கூட எங்களைத் தட்டிக்கொடுப்பதாக அமையவேண்டுகிறோம்.
பலருக்கு இதன் தலைப்புக் கூட தலையைச் சுத்தும் என்பது திண்ணம், புரியாதவற்றை பிடிக்கவில்லை என்று ஒதுக்கித் தள்ளாமல் புரிந்து கொள்ள முனைவதே அறிவாகும், இல்லையா? “தானே கண்டறிந்ததும் பிறருக்குச் சொல்ல முடியாததுமான அறிவினைச் சான்றோர் நூற்கள் அநுபூதி என்னும் பதத்தால் தெளிவுபடுத்துகிறது” என்பதனை அறிக. ஆனால் இங்கு எங்கள் அனுபவங்கள் மூலம் கண்டறிந்தவற்றில் கூறமுடியாத சிலவற்றை தெளிவுபடுத்த முனைகிறோம்.
இதில் எத்துணையோரையும் தாக்கிக் கொள்ளும் நோக்கம் எமக்குப் பனித்துளியேனுமில்
Leggi meno